சமாரியா பெண்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதேயாவிலிருந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்து, கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சமாரியா மாகாணம் வழியாகப் போகிறார்கள். ரொம்பத் தூரம் நடந்ததால் எல்லாரும் களைப்பாக இருக்கிறார்கள். உச்சி வெயில் அடிக்கும் நேரத்தில், சீகார் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் வந்துசேர்கிறார்கள். அங்கே இருக்கிற ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கிணற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் யாக்கோபு வெட்டியிருக்கலாம், அல்லது கூலி கொடுத்து வெட்ட வைத்திருக்கலாம். இன்றும்கூட, நாப்லஸ் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் இந்தக் கிணற்றைப் பார்க்க முடியும். இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் இயேசு ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய சீஷர்கள் உணவு வாங்குவதற்காகப் பக்கத்திலிருக்கிற நகரத்துக்குப் போகிறார்கள். அப்போது, ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக அங்கே வருகிறாள். இயேசு அவளிடம், “குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்கிறார். யூதர்களும் சமாரியர்களும் பரம விரோதிகள். அதனால், ஒருவருக்கொருவர் பேசக்கூட மாட்டார்கள். இயேசு தண்ணீர்...